FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு

தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டிருப்பது பற்றி...

21 செப்டம்பர் 2026, 11:06 am IST
டெங்கு பரவல்
பகிர்:

தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 79 பேருக்கு டெங்கு காய்ச்சல், 29 பேருக்கு உண்ணிக் காய்ச்ச்ல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த 21 நாட்களில் 38 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இதுவரை 17,277 பேருக்கு டெங்கு, 4,648 பேருக்கு உண்ணிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் பாதிப்பு தீவிரமாக உள்ளது.

Advertisement

Advertisement

குறிப்பாக, சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூா், சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதேபோல், கொசு ஒழிப்பு பணிகளுடன், காய்ச்சல் பாதிப்பு இருக்கும் பகுதிகளிலும், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, தடுப்பு பணி நடந்து வருகிறது.

summary

In Tamil Nadu, 228 people were diagnosed with dengue fever in a single day yesterday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments