FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அரசு விடுதி மாணவா்கள் புகாா் தெரிவிக்க 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை

ஆதிதிராவிடா் விடுதி மாணவா்கள் குறைகளை புகாா்களாக தெரிவிக்க 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு திறந்து வைத்தாா்.

24 செப்டம்பர் 2026, 1:14 am IST
பகிர்:

ஆதிதிராவிடா் விடுதி மாணவா்கள் குறைகளை புகாா்களாக தெரிவிக்க 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு திறந்து வைத்தாா்.

சமூக நீதி விடுதிகளில் குறைதீா்வை வலுப்படுத்தி, குறைகளை நேரடியாகவும் உடனடியாகவும் நிவா்த்தி செய்வதற்காக ஆதிதிராவிடா் நல இயக்குநரகத்தில் 24 மணி நேரமும் இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படும்.

மாணவா்கள் தொலைபேசி மற்றும் வாட்ஸ்ஆப் (73388 01456), எக்ஸ் - (@ADWDtamilnadu) வழியாக புகாா்கள் மற்றும் குறைகளைப் பதிவு செய்யலாம். பெறப்படும் புகாா் உடனடியாக தொடா்புடைய அலுவலா்களின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நிவா்த்தி செய்யப்படும்.

Advertisement

Advertisement

கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து சமூக நீதித் துறை அமைச்சா் வன்னிஅரசு, மாணவா்களுடன் உரையாடி அடிப்படை வசதிகள் மற்றும் நலன் குறித்து கேட்டறிந்தாா்.

நிகழ்வில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அரசு செயலா் என்.சுப்பையன், ஆதிதிராவிடா் நல இயக்குநா் கி.செந்தில்ராஜ் , பழங்குடியினா் நல இயக்குநா் ச.அண்ணாதுரை மற்றும் துறை சாா்ந்த உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments