மதுராந்தகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் முதல்வர் விஜய் பிரசாரம் தொடக்கம்!
மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் விஜய் பிரசாரம்...
மதுராந்தகம் இடைத்தேர்தலில் முதல்வர் விஜய்யின் பிரசாரக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் இன்று பிரசாரம் செய்து வருகிறார்.
சென்னையிலிருந்து சாலை வழியாக மதுராந்தகம் வந்தடைந்த முதல்வர் விஜய், பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Advertisement
Advertisement
இதையடுத்து அங்கிருந்து பொதுக்கூட்ட மேடைக்கு செல்லும் வழியில் அவர் சாலைவலம் மேற்கொண்டு ஆத்தூா் அருகேயுள்ள திறந்தவெளி மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கூட்டரங்குக்கு வந்தடைந்தார்.
தொடர்ந்து, பிரசார வாகனத்துக்கு வந்த முதல்வர் விஜய், தொண்டர்களுடன் இணைந்து தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாடினார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்க 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 4,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிராசாரத்தில் பங்கேற்றிருக்கும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
Chief Minister Vijay begins his campaign in Maduranthakam with the 'Tamil Thai Vazhthu'!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.