ஜெம் வீரமணி வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு!
ஜெம் வீரமணி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையிடப்பட்டிருப்பது பற்றி...
ஜெம் வீரமணி மீதான வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றம்சாட்டப்படும் ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, மகேந்திர சிம்ஹம், வீரமணியின் உதவியாளர் கணேசன் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில், மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா இன்று காலை முறையீடு செய்தார்.
Advertisement
Advertisement
அந்த மனுவில், இந்த வழக்கில் சிறுமிகளின் விடியோக்கள் வெளியாகியுள்ளன. காவல் துறை உயர் அதிகாரிகள் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த மனுவை பிற்பகல் அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் புலன் விசாரணையை தொடரட்டும். முறையீடு தொடர்பாக மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இதேபோல, வழக்கறிஞர் நிவ்யா, விடியோக்கள் வெளியான விவகாரம் தொடர்பாக நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன் முறையீடு செய்தார். முறையீட்டை கேட்ட நீதிபதி, மனுத்தாக்கல் செய்தால் பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
Gem Veeramani Case: Plea filed seeking transfer to CBI investigation!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.