புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிராக பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு!
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு எதிராக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு எதிராக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னையில் ரூ. 1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதல்வர் ச. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார. இதனைத் தொடர்ந்து சென்னையைச் சுற்றிலும் சில இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, இறுதியாக பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டப்படும் என அறிவிப்பு வெளியாகி, அரசாணையும் வெளியிடப்பட்டது.
ஆனால், சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு 9 மீனவ கிராமங்களைச் சோ்ந்த மக்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தவெக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
Advertisement
Advertisement
இதையடுத்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான அரசாணையை முதல்வர் விஜய் ரத்து செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கறிஞர் விஜய் ஆனந்த் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடலோர ஒழுங்குமுறை மதிப்பீடு, சுற்றுச்சூழல் ஆய்வுகள் மேற்கொள்ளாமல் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் பட்டினப்பாக்கத்தில் கட்டுவது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அறிவிப்புக்கு எதிரானது என்றும் மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இதேபோல பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Case filed against the new Secretariat at the Green Tribunal
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.