போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 சிறுமிகள் பாலியல் புகார்!
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீது மேலும் 3 சிறுமிகள் பாலியல் புகார் கொடுத்துள்ளதாக தகவல்...
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீது மேலும் 3 சிறுமிகள் பாலியல் புகார் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக விசாரிக்க 4 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.
அதன்படி கூடுதல் ஆணையர் தேன்மொழி, இணை ஆணையர் திஷா மிட்டல், காவல் கண்காணிப்பாளர்கள் முத்தரசி, கீதாஞ்சலி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் யார் வேண்டுமானாலும் நேரடியாக புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
அதன்படி வீரமணி பாலியல் தொல்லை கொடுத்ததாக மேலும் 3 சிறுமிகள் புகார் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை 15 சிறுமிகள் புகார் கொடுத்துள்ளனர். வீரமணியால் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுமிகள் முன்வந்து புகார் அளிக்குமாறு சிறப்பு புலனாய்வுக் குழு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் ஏடிஜிபி அருண், ஐஜிபி கண்ணன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sexual assault complaints from three more girls in the POCSO case against Veeramani
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.