தவெக அரசியல், பொருளாதாரக் கொள்கை வழி எது?- திருப்பூர் எம்.பி. சுப்பராயன் கேள்வி
தவெகவின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் உழைக்கும் மக்களுக்குச் சாதகமாக இல்லை என சிபிஐ எம்.பி. சுப்பராயன் பேசியிருப்பது குறித்து...
தவெக அரசியல், பொருளாதாரக் கொள்கை வழி எது? என கேள்வி எழுப்பியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன், அந்த கட்சியின் கொள்கைகளில் தெளிவு இல்லை என விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
தவெக அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையின் வாடைதான் மேலோங்கி நிற்கிறது. மத்திய அரசைப் போலவே தவெக சமூகத்தின் உண்மையான செல்வத்தைப் படைக்கக்கூடிய தொழிலாளி வர்க்கத்தையும், விவசாய வர்க்கத்தையும் கைவிட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
Advertisement
Advertisement
தமிழக அரசு அனுப்பியுள்ள தீர்மானங்களில் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு ஆதரவு அளிக்கும் தீர்மானங்கள் இடம் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டியவர், இது கல்வி மற்றும் பிற துறைகளில் தனியார்மயமாக்கலில் கொண்டுள்ள ஆர்வத்தையே காட்டுகிறது.
மேலும், தவெகவின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் உழைக்கும் மக்களுக்குச் சாதகமாக இல்லை. அவர்களின் பொருளாதாரப் பாதை தெளிவற்றதாக உள்ளது.
தவெக அரசு இதுவரை தனது திட்டவட்டமான கொள்கையை அறிவிக்கவில்லை, நாட்டை நல்வழிப்படுத்தும் கொள்கை கொண்ட இடதுசாரிகளின் பாதையா? நாட்டை நாசகாரபாதையில் இழுத்து செல்லும் வலதுசாரிகளின் பாதையா?, தெளிவுப்படுத்துங்கள் விஜய் என அவர் கூறிள்ளார்.
What is the path of TVK's political and economic policies? – Tiruppur MP Subbarayan asks
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.