முதல்வர் விஜய் நாளை கோவை வருகை! ட்ரோன்கள் பறக்கத் தடை!
கோவை வருகை தரும் முதல்வர் விஜயை முன்னிட்டு 48 மணி நேரம் ட்ரோன் பறக்க தடை..
கோவை மாவட்டத்திற்கு முதல்வர் விஜய் வருகை தந்ததையடுத்து அடுத்த 48 மணி நேரம் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
கோவை மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் விஜய் நாளை (செப். 30) -ஆம் தேதி வருகை தரவுள்ள நிலையில், தாராபுரத்தில் பிரசாரம் செய்யவுள்ளார். இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகள் மற்றும் அவர் பயணிக்கும் வழித்தடங்களில், ட்ரோன்கள் உள்ளிட்ட ஆளில்லா வான்வழி சாதனங்களைப் பறக்கவிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை, செப்டம்பர் 29ஆம் தேதி அதிகாலை ஒரு மணி முதல், அக்டோபர் 1-ஆம் தேதி அதிகாலை ஒரு மணி வரை மொத்தம் 48 மணி நேரம் அமலில் இருக்கும் எனக் கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கோவை மாவட்ட காவல் எல்லை மற்றும் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்கள் அல்லது ஆளில்லா வான்வழி சாதனங்களைப் பறக்கவிடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் கோவை வருகையை முன்னிட்டு, காவல்துறையினர் உச்சக்கட்ட பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.