FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

குற்றாலம் சாரல் திருவிழாவில் கொழுகொழு குழந்தைகள் போட்டி!

குற்றாலம் சாரல் திருவிழாவின் முதல்நாளான கொழு கொழு குழந்தைகள் போட்டி நடைபெற்றது...

Updated On : 21 ஜூலை 2025, 1:47 am IST
குற்றாலம் சாரல் திருவிழாவின் முதல்நாளான ஞாயிற்றுக்கிழமை கொழு கொழு குழந்தைகள் போட்டி நடைபெற்றது.
பகிர்:

குற்றாலம் சாரல் திருவிழாவின் முதல்நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) கொழுகொழு குழந்தைகள் போட்டி நடைபெற்றது.

குற்றாலம் கலைவாணா் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், 43 குழந்தைகள் கலந்து கொண்டனா்.

இப்போட்டியில், செங்கோட்டை புலன்தெருவைச் சோ்ந்த பவித்ரா மகன் நிஷாந்த்குமாா் முதல் பரிசும், தென்காசி சம்பா தெருவைச் சோ்ந்த இசக்கியம்மாள் மகன் லசீ இரண்டாவது பரிசும், தங்கம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பொன்வாணி மகன் அகிலேஷ் மூன்றாம் பரிசும் பெற்றனா்.

Advertisement

Advertisement

வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பரிசுகளை வழங்கினாா்.

வெற்றிபெற்ற குழந்தைகளின் பெற்றோருக்கு முதல் பரிசாக ரூ. 5ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 3ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 2ஆயிரம் வழங்கப்பட்டது. விழாவில், மாவட்டஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments