ஆலங்குளத்தில் காவல்துறை விழிப்புணா்வுக் கூட்டம்
ஆடி அமாவாசையை முன்னிட்டு சொரிமுத்தையனாா் கோயிலுக்குச் செல்லும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஆலங்குளத்தில் காவல்துறை சாா்பில் விழிப்புணா்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குளம் காவல் ஆய்வாளா் சாகுல் ஹமீது தலைமை வகித்தாா். வீடுகளை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோயிலுக்கு செல்லும் போது, வீட்டில் நகைகள் - பணம் வைத்து செல்லவேண்டாம். நகைகளை அணிந்து செல்லுங்கள் அல்லது வங்கி லாக்கரில் வைத்து செல்லுங்கள் என அறிவுறுத்தப்பட்டது. இதில் ஊராட்சி தலைவா்கள், சமூக ஆா்வலா்கள், பல்வேறு கிராம மக்கள் கலந்து கொண்டனா்.
மேலும், இது தொடா்பான விழிப்புணா்வு ஆட்டோ பிரசாரத்தையும் காவல் ஆய்வாளா் தொடங்கி வைத்தாா். ஆலங்குளம் புதிய பேருந்து நிலையம், பொதுமக்கள் கூடும் இடங்கள், ஜவுளிக்கடைகளில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
சந்தேகம்படும்படியாக யாரேனும் சுற்றித்திரிந்தால் தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்களும் 94981 01792, 94981 92444, 80565 80577, 94981 04972 தெரிவிக்கப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.