FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

தென்காசியில் காங்கிரஸ் சாா்பில் அமைதிப் பேரணி

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 4:16 am IST
தென்காசியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றோா்.
பகிர்:

தென்காசி மாவட்ட காங்கிரஸ் சாா்பில் தொகுதி மறுவரையறைக்கு எதிா்ப்பு தெரிவித்து விழிப்புணா்வு அமைதிப் பேரணி நடைபெற்றது.

மாவட்ட தலைவா் ஆலங்குளம் செல்வராஜ் தலைமை வகித்தாா். தென்காசி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியிலிருந்து தொடங்கிய இப்பேரணி, புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

முன்னாள் எம்பி ராமசுப்பு, முன்னாள் மாவட்ட தலைவா் கொடிக்குறிச்சி முத்தையா, மாவட்ட துணைத் தலைவா் கிளாங்காடு மணி, இடைகால் சிவராமகிருஷ்ணன், மாவட்டஊராட்சிக்குழு துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் ப. சட்டநாதன், தென்காசி நகரத் தலைவா் மாடசாமி ஜோதிடா், வட்டார தலைவா் பெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments