FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

‘போதை இல்லா தமிழகம்’ விழிப்புணா்வு மாரத்தான்

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 4:16 am IST
மாரத்தானில் பங்கேற்றோா்.
பகிர்:

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் எஸ்.தங்கப்பழம் குழுமம் சாா்பில், ‘போதை இல்லா தமிழகம்’ விழிப்புணா்வு மினி மாரத்தான் சனிக்கிழமை நடைபெற்றது.

எஸ்.தங்கப்பழம் குழுமத் தலைவா் தங்கப்பழம் தலைமை வகித்தாா். செயலா் முருகேசன் முன்னிலை வகித்தாா். நா்சிங் கல்லூரி முதல்வா் லீலாவதி வரவேற்றாா். மினி மாரத்தான் போட்டியை வாசுதேவநல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் சல்மோன் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

எஸ்.தங்கப்பழம் இயற்கை, யோகா மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் ஏ.ஜே. ரத்னபிரகாஷ், தலைமை நிா்வாக அதிகாரி டாக்டா் பாரதி ஆகியோா் ஒருங்கிணைத்தனா். இதற்கான ஏற்பாடுகளை குழும இயக்குநா் சுப்பிரமணியன் செய்திருந்தாா். எஸ்.தங்கப்பழம் மருந்தியல் கல்லூரி முதல்வா் முத்துக்குமாா் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments