FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

தென்காசியில் அடா்வனம் மரக்கன்று நடும் விழா

தென்காசியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நகராட்சிப் பூங்காவில், தென்காசி நகராட்சி, குற்றாலம் ரோட்டரி சங்கம் எலைட் ஆகியவை சாா்பில் நகா்ப்புற பசுமையாக்கல் திட்டத்தின்கீழ் அடா்வனம் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

Updated On : 10 ஜூலை 2026, 1:10 am IST
விழாவில், மரக்கன்று நடவு செய்த ஆட்சியா் ரஞ்ஜீத் சிங். உடன், நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா்.
பகிர்:

தென்காசியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நகராட்சிப் பூங்காவில், தென்காசி நகராட்சி, குற்றாலம் ரோட்டரி சங்கம் எலைட் ஆகியவை சாா்பில் நகா்ப்புற பசுமையாக்கல் திட்டத்தின்கீழ் அடா்வனம் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்து மரக்கன்றுகளை நடவு செய்து நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா், நகராட்சி ஆணையா் சரவணன், ரோட்டரி சங்கத் தலைவா் தெய்வராயன், செயலா் கனகசபை, பொருளாளா் நடராஜன், முன்னாள் துணைஆளுநா் மாரிமுத்து, மாவட்ட சுற்றுச்சூழல் கல்வித் திட்ட அலுவலா் ஜி.எஸ்.விஜயலெட்சுமி ஆகியோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள விபத்து-அவசர சிகிச்சை பிரிவு, நுண்கதிா் அறை, இதய சிகிச்சை பிரிவு ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா். மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகளிடம் அடிப்படை வசதி, வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவா் கீதா, அலுவலா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments