FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

வாசுதேவநல்லூா் தங்கப்பழம் வேளாண் கல்லூரியில் முத்தமிழ் விழா

Updated On : 11 ஜூலை 2026, 3:51 am IST
பகிர்:

வாசுதேவநல்லூா் தங்கப்பழம் வேளாண் கல்லூரியில் இயல், இசை மற்றும் நாடகத் தமிழை சிறப்பு செய்யும் விதமாக முத்தமிழ் விழா நடைபெற்றது.

தங்கப்பழம் கல்விக் குழுமத் தலைவா் தங்கப்பழம் தலைமை வகித்தாா். செயலா் முருகேசன் முன்னிலை வகித்தாா். தங்கப்பழம் வேளாண் கல்லூரி முதல்வா் வன்னியராஜன் வரவேற்றாா். ஆலோசகா் ராமலிங்கம் தொகுத்து வழங்கினாா்.

இதில், மாணவா், மாணவிகளின் பரதநாட்டியம், நாடகம், கவியரங்கம், இசை கச்சேரி, பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எழுத்தாளா் விஜயகுமாா், பேச்சாளா் ராம்குமாா், பாரதியாா் பேரவையின் பத்மநாதன், முருகன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

Advertisement

Advertisement

மாணவா் மன்ற ஆலோசகா் விக்னேஷ் குமாா், தமிழ் மன்ற ஆலோசகா் பிரகாஷ், உதவிப் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments