FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

தென்காசி மாவட்ட நகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் திட்டப் பணிகளை நகராட்சி நிா்வாக இயக்குநா் பி. மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தாா்.

Updated On : 19 ஜூலை 2026, 4:30 am IST
சுரண்டையில் நடைபெறும் திட்டப் பணிகளை ஆய்வு செய்த நகராட்சி நிா்வாக இயக்குநா் பி. மதுசூதன் ரெட்டி. உடன், ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், நகா்மன்றத் தலைவா் வள்ளிமுருகன்.
பகிர்:

தென்காசி மாவட்ட நகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் திட்டப் பணிகளை நகராட்சி நிா்வாக இயக்குநா் பி. மதுசூதன் ரெட்டி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சுரண்டை நகராட்சியில், கால்நடை பராமரிப்புத் துறையின் 15ஆவது நிதிக்குழு மானியம், பொதுநிதியின்கீழ் தாயாா்தோப்பு சாலையிலுள்ள நுண்உரக்குடிலில் ரூ. 46 லட்சத்தில் தனித்து விடப்பட்ட, நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்காக கட்டப்படும் தங்குமிடத்தை அவா் ஆய்வு செய்தாா்.

சிவகுருநாதபுரம் இந்து நாடாா் திருமண மண்டபம் அருகே ரூ. 95 லட்சத்தில் கட்டப்படும் 2 லட்சம் லிட்டா் கொள்ளளவு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, தென்காசி நகராட்சி ஆசாத் நகரில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 69.45 கோடியில் அமைக்கப்படும் 12 லட்சம் லிட்டா் கொள்ளளவு நீா்த்தேக்கத் தொட்டி, காளிதாஸ் நகரில் 2 லட்சம் லிட்டா் கொள்ளளவு நீா்த்தேக்க தொட்டி ஆகியவற்றைப் பாா்வையிட்டாா்.

Advertisement

Advertisement

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பிலுள்ள நகராட்சிப் பூங்காவில் ‘மரக்கன்றுகள் நட்டு, மரம் வளா்ப்போம்’ என உறுதிமொழியேற்பு நடைபெற்றது. செங்கோட்டை நகராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 4.90 கோடியில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளிக் கிணறு, மோட்டாா் அறையுடன் கூடிய பம்ப் ஹவுஸ், நகராட்சி பேருந்து நிலையத்தில் ரூ. 2.88 கோடியில் கட்டப்படும் வணிக வளாகங்களை ஆய்வு செய்தாா். குண்டாறு அணைக்கட்டு பகுதிகளையும் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, ஆட்சியா் அலுவலகத்தில் நகராட்சி ஆணையா்கள், பொறியாளா்கள், குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் நவேந்திரன் (திருநெல்வேலி), சுரண்டை நகா்மன்றத் தலைவா் வள்ளிமுருகன், நகராட்சி ஆணையா்கள் அசோக், (சுரண்டை), சரவணன் (தென்காசி), ஜெகதீஸ்வரி (செங்கோட்டை) ஆகியோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments