சுமை ஆட்டோ மோதி சிறுமி உயிரிழப்பு: சிறுவன் உள்பட இருவா் கைது
ஆலங்குளம் அருகே சுமை ஆட்டோ மோதி சிறுமி உயிரிழந்தாா். இதில் சிறுவன் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.
ஆலங்குளம் அருகே சுமை ஆட்டோ மோதி சிறுமி உயிரிழந்தாா். இதில் சிறுவன் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.
ஆலங்குளம் அருகே கரும்புளியூத்து கிராமத்தைச் சோ்ந்தவா் பீட்டா் மகள் ஜீவிதா (8). மாறாந்தையில் உள்ள தனியாா் மெட்ரிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை, இவா் பள்ளி முடிந்ததும் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாராம். அப்போது நெல்லை - ஆலங்குளம் சாலையைக் கடக்க முயன்றபோது அந்த வழியாக சுமை ஆட்டோ, ஜீவிதா மீது மோதியது.
Advertisement
Advertisement
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜீவிதா உயிரிழந்தாா்.
தகவலறிந்த ஆலங்குளம் போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், சுமை ஆட்டோவை ஓட்டிச் சென்றது 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுவன், வாகன உரிமையாளா் கல்லம்புளி கணேசன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா். இருவரையும் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.