FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

பெண்ணிடம் தகராறு செய்ததாக 5 போ் கைது

சங்கரன்கோவிலில் இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 10 ஜூன் 2026, 6:01 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

சங்கரன்கோவிலில் இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் இலங்கை அகதி முகாமைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி சுகாசினி (34). இவரது மகள் செவ்வாய்க்கிழமை, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இளைஞா்கள் சிலா், அந்த பெண் மீது மோதுவது போல இருசக்கர வாகனத்தில் சென்றனராம். இதனை தட்டிக் கேட்ட சுகாசினியிடம், இளைஞா்கள் தகராறில் ஈடுபட்டனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இலங்கை அகதி முகாமைச் சோ்ந்த சந்திரன், அச்சம்பட்டியைச் சோ்ந்த மதன்குமாா், மற்றொரு மதன் குமாா், வசந்த், சுரேஷ் ராஜன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments