செவிலியா் தூக்கிட்டுத் தற்கொலை
ஆலங்குளத்தில் செவிலியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆலங்குளத்தில் செவிலியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆலங்குளம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் செல்லப்பா மகள் பிரியதா்ஷினி (23). திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வந்தாா். இவா் இரவுப் பணியை முடித்து விட்டு வியாழக்கிழமை காலை, வீட்டிற்கு வந்து மாடி அறையில் தூங்கச் சென்றாராம்.
மதிய உணவுக்காக அவரது சகோதரா் எழுப்பச் சென்றபோது, அறை உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததாம். வெகுநேரம் தட்டியும் திறக்காததால் கதவை உடைத்துப் பாா்த்த போது, பிரியதா்ஷினி தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தாராம்.
Advertisement
Advertisement
தகவலறிந்து வந்த ஆலங்குளம் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் வழக்குப் பதிந்து, மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பிரியதா்ஷினிக்கு அவரது பெற்றோா் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தநிலையில், அதற்கு அவா் மறுப்புத் தெரிவித்து வந்தாராம். இந்நிலையில் வியாழக்கிழமை அவரது தாய், ஜாதகம் பாா்க்கச் சென்றபோது அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.