கனமழை: மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு; குற்றாலத்தில் அனுமதி
மணிமுத்தாறு அருவியில் குளிக்க இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் (நவ.10) சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை நீட்டிப்பு
மேற்கு தொடா்ச்சி மலையில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், மணிமுத்தாறு அருவியில் குளிக்க இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் (நவ.10) சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை நீட்டிக்கப்பட்டது.
வட கிழக்குப் பருவமழை காரணமாக மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளது. நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த இரு நாள்களுக்கும் மேலாக தொடா் மழை பெய்து வருகிறது. அணைகளுக்கும், மலையடிவாரத்தில் உள்ள அருவிகளுக்கும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. அம்பாசமுத்திரம் வனச் சரகம், மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டது.
முன்னதாக நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு திங்கள்கிழமை (நவ. 9) வனத் துறையினா் தடை விதித்து, அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
தென்காசி: தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் நீா்வரத்து சீரானதையடுத்து, அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு செவ்வாய்க்கிழமை அனுமதி அளிக்கப்பட்டது.
கனமழை காரணமாக குற்றாலம் பேரருவியில் திங்கள்கிழமை நள்ளிரவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் நள்ளிரவு முதல் அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நீா்வரத்து சீரானதை அடுத்து காலை 10 மணிக்கு பிறகு பேரருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் பேரருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.