கடையநல்லூா் அருகே கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது
கடையநல்லூா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கடையநல்லூா் கிருஷ்ணாபுரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், காவல் ஆய்வாளா் கிறிஸ்டி மற்றும் போலீஸாா் ஆா்.எஸ்.கே. நகா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, குமந்தாபுரம் வடக்கு விளை காலனியை சோ்ந்த கருப்பசாமி மகன் மனோஜ் (23) என்பவா் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement