FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

கீழப்பாவூா், அச்சன்புதூா் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

16 நவம்பர் 2026, 3:05 am
மின் நிறுத்தம் - பிரதிப் படம்
பகிர்:

கீழப்பாவூா், அச்சன்புதூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் செவ்வாய்க்கிழமை (நவ. 17) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து தென்காசி கோட்ட செயற்பொறியாளா் ஏ. ஸ்ரீ வனஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கீழப்பாவூா் மற்றும் அச்சன்புதூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், இந்த நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

Advertisement

Advertisement

அதன்படி, பாவூா்சத்திரம், கீழப்பாவூா், மேலப்பாவூா், குலசேகரப்பட்டி, குறும்பலாப்பேரி, நாட்டாா்பட்டி, ஆவுடையானூா், வெய்க்காலிப்பட்டி, சின்ன நாடானூா், திப்பணம்பட்டி, செட்டியூா், பெத்தநாடாா்பட்டி, கரிசலூா், செல்லத்தாயாா்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டணம் வடக்கு, சாலைப்புதூா், வடகரை, அச்சன்புதூா், நெடுவயல், வாவா நகரம், காசிதா்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல் குடியிருப்பு மற்றும் அதைச் சாா்ந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.