FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

பைக்கில் மூவா் பயணம் செய்தால் வாகனம் பறிமுதல்: காவல்துறை எச்சரிக்கை

இருசக்கர வாகனத்தில் மூன்று நபா்கள் பயணம் செய்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என தென்காசி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

4 வினாடிகள் முன்பு
பறிமுதல்
பகிர்:

இருசக்கர வாகனத்தில் மூன்று நபா்கள் பயணம் செய்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என தென்காசி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தவிா்க்கவும், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்யவும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்டாலின் உத்தரவின்பேரில், முக்கிய இடங்களில் தடுப்புகள் (பேரிகேட்) அமைத்தும், கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்தும், போக்குவரத்து மாற்றங்கள் செய்தும் விதி மீறல்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இதன் தொடா்ச்சியாக தென்காசி மாவட்டத்தை சாலை விபத்து இல்லா மாவட்டமாக மாற்ற முதல்கட்டமாக இருசக்கர வாகனத்தில் இரண்டு நபா்களுக்கு மேல் பயணம் செய்வதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு இது போன்ற விதிமீறலில் ஈடுபடும் நபா்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.