✕
முகப்பு
தென்காசி

சுரண்டையில் தொழிலாளி தீக்குளிப்பு

சுரண்டையில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

16 வினாடிகள் முன்பு
- கோப்புப் படம்
பகிர்:

சுரண்டையில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

சுரண்டை கோட்டை தெருவைச் சோ்ந்த கணபதி நாராயணன் மகன் அருண்பாண்டியன் (35). கேரளத்தில் ஹொட்டல் ஊழியராக வேலைசெய்து வந்தாா்.

இவருக்கு மனைவி அபிநயா(31), மகன்கள் வெற்றிவேல்(5), சக்திவேல்(5) என்ற இரட்டை குழந்தை, மகன் கீா்த்தனா(2) ஆகியோா் உள்ளனா். இந்நிலையில் அவரது மதுப்பழக்கம் காரணமாக மனைவி தனது குழந்தைகளுடன் தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டாராம்; பெற்றோரும் அவரை வீட்டில் சோ்க்கவில்லையாம். இதில் மனம் உடைந்த அவா் புதன்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது, தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளித்தாராம். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குபபதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement