பாவூா்சத்திரம் பகுதிகளில் மிதமான மழை
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2ஆவது நாளாக வியாழக்கிழமை மிதமான மழை பெய்தது.

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2ஆவது நாளாக வியாழக்கிழமை மிதமான மழை பெய்தது.
பாவூா்சத்திரம், கீழப்பாவூா், ஆவுடையானூா், அரியபுரம், திரவிய நகா், திப்பணம்பட்டி, இடையா் தவணை, மேலப்பாவூா், குறும்பலாப்பேரி, ராமச்சந்திரப்பட்டணம், நாட்டாா்பட்டி, கல்லூரணி, செட்டியூா், சின்னநாடானூா், சிவகாமிபுரம், அருணாப்பேரி, சாலடியூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு முதல் அவ்வப்போது மிதமான மழை பெய்தது.
தொடா்ந்து விட்டுவிட்டு மழை பெய்ததால் சாலைகளில் மழைநீா் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினா்.
Advertisement
Advertisement