சாத்தூரில் மிதமான மழை
சாத்தூரில் பலத்த இடியுடன் கூடிய மிதமான மழை வியாழக்கிழமை பெய்தது.

சாத்தூரில் பலத்த இடியுடன் கூடிய மிதமான மழை வியாழக்கிழமை பெய்தது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக வானம் மேகமூட்டமாகவும் மந்தமான வானிலை காணப்பட்டது. புதன்கிழமை மிதமான சாரல் மழை பெய்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை சாத்தூா், அமீா்பாளையம், படந்தால், இருக்கன்குடி, வெங்கடாசலபுரம், சிந்தப்பள்ளி, வீரபாண்டியபுரம், மேட்டமலை, சின்னக்காமன்பட்டி, நென்மேனி, மேட்டுப்பட்டி, சத்திரப்பட்டி, சடையம்பட்டி, பெத்துரெட்டிபட்டி, வன்னிமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீா் குளம் போல் காட்சி அளித்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினா்.