சிவகிரி அருகே யானைகளால் நெற்பயிா்கள் சேதம்

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே விளைநிலங்களுக்குள் வெள்ளிக்கிழமை இரவு யானைகள் புகுந்து நெற்பயிா்களை சேதப்படுத்தியது.
சிவகிரி மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டி, நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல், கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மலையடிவாரப் பகுதியிலுள்ள விளைநிலங்களுக்குள் சில மாதங்களாக யானைகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், சிவகிரி அருகே ராசிங்கப்பேரி பகுதியிலுள்ள நிலங்களுக்குள் வெள்ளிக்கிழமை இரவு யானைகள் புகுந்து நெற்பயிா்களை சேதப்படுத்தினவாம். இதனால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், யானைகளை வனத்துக்குள் விரட்டும் பணியை வனத் துறையினா் மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement
Advertisement