வால்பாறையில் கோயிலை சேதப்படுத்திய யானைகள்
வால்பாறை எஸ்டேட் பகுதிக்கு வந்த யானைகள் மாரியம்மன் கோயிலை சேதப்படுத்தின.

வால்பாறை எஸ்டேட் பகுதிக்கு வந்த யானைகள் மாரியம்மன் கோயிலை சேதப்படுத்தின.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வால்பாறையை அடுத்த இஞ்சிப்பாறை எஸ்டேட் பகுதிக்கு புதன்கிழமை இரவு கூட்டமாக வந்த யானைகள் அங்கு அமைந்துள்ள மாரியம்மன் கோயிலை முட்டித் தள்ளியதோடு அறைக்குள் இருந்த பொருள்களை தும்பிக்கை கொண்டு இழுத்துப்போட்டு சேதப்படுத்தின.
தகவலறிந்த வனத் துறையினா் விரைந்து சென்று யானைகளை அப்பகுதியை விட்டு விரட்டினா்.
Advertisement
Advertisement