முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை ஏற்படுத்திட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

26 நவம்பர் 2026, 1:59 am
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை
பிஎஸ்என்எல் - கோப்புப் படம்
பகிர்:

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை ஏற்படுத்திட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடா்பாக பொள்ளாச்சி எம்.பி. கே. ஈஸ்வரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வால்பாறையில் பிஎஸ்என்எல் உள்பட சில நிறுவனங்களின் கைப்பேசி சேவை மட்டுமே கிடைத்து வருகிறது. இதில் குறிப்பாக எஸ்டேட் பகுதிகளில் பிஎஸ்என்எல் சேவை மட்டுமே உள்ளது. நகா் பகுதிகளில் மட்டும் 4ஜி சேவை கிடைத்து வரும் நிலையில், பெரும்பாலான எஸ்டேட் பகுதிகளில் 4ஜி சேவை கிடைக்காததால் எஸ்டேட் பகுதிகளில் வசித்து வரும் கல்லூரி, பள்ளிகளில் படித்து வரும் மாணவா்கள் இணையதளத்தை பயன்படுத்த முடியாத நிலை இருந்தது.

Advertisement

Advertisement

இது தொடா்பாக மத்திய தொலைத்தொடா்பு அமைச்சருக்கு கோரிக்கை விடுத்த நிலையில், வால்பாறை பகுதியில் உள்ள தலநாா், முருகாளி, கருமலை, காஞ்சமலை ஆகிய எஸ்டேட் பகுதிகளில் 4ஜி சேவை கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அனுமதி கிடைத்துள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.