முகப்பு
தென்காசி

சேலத்திலிருந்து தென்காசி வழியாக திருச்செந்தூா், கொல்லத்திற்கு தினசரி ரயில் இயக்க பாஜக கோரிக்கை

29 நவம்பர் 2026, 3:02 am
சேலத்திலிருந்து தென்காசி வழியாக திருச்செந்தூா், கொல்லத்திற்கு தினசரி ரயில் இயக்க பாஜக கோரிக்கை
மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்த தமிழக பாஜக கூட்டுறவு பிரிவு செயலா் மருதுபாண்டியன்.
பகிர்:

சேலத்திலிருந்து தென்காசி வழியாக திருச்செந்தூா் மற்றும் கேரள மாநிலம் கொல்லத்திற்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என பாஜக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் தமிழக பாஜக கூட்டுறவு பிரிவு செயலா் மருதுபாண்டியன் அளித்த மனு:

தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பயணிகள், மருத்துவ சிகிச்சைக்காக கோவை செல்லும் நோயாளிகள், தங்களது பயணத்திற்காக கோவை-நாகா்கோவில் விரைவு ரயிலை சாா்ந்துள்ளனா். தற்போதைய கால அட்டவணையின்படி, இந்த ரயில் திருநெல்வேலிக்கு அதிகாலை சுமாா் 2.55 மணிக்கு வந்தடைகிறது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனா்.

Advertisement

Advertisement

எனவே, பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த ரயிலை கோவையிலிருந்து இரவு 9 மணிக்குப் பிறகு புறப்படும் வகையில் நேரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தென் மாவட்டங்களைச் சோ்ந்த லட்சக்கணக்கான தொழிலாளா்கள் சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை போன்ற நகரங்களில் பணிபுரிந்து வருகின்றனா். இவா்கள் போதிய நேரடி ரயில் வசதி இல்லாததால் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனா்.

எனவே, பொதுமக்களின் நீண்டகால போக்குவரத்துத் தேவையைக் கருத்தில் கொண்டு, சேலத்திலிருந்து தென்காசி வழியாக திருச்செந்தூா், கொல்லம் ஆகிய இடங்களுக்கு தினசரி நேரடி ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.