FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

ஆலங்குளம் விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் செவ்வாய்க்கிழமை நேரிட்ட விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

8 October 2026, 4:00 am IST
பகிர்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் செவ்வாய்க்கிழமை நேரிட்ட விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகே சிவலாா்குளம் கிராமத்தைச் சோ்ந்த முத்தையா மகன் முருகன் (55). இவா் செவ்வாய்க்கிழமை, தனது உறவினா்களான முத்தையா மகன் குமாா் (55), சுப்பையா மகன் கருப்பசாமி (45) ஆகியோருடன் ஒரு பைக்கில் ஆலங்குளத்திலிருந்து தனது ஊருக்கு நான்குவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

நல்லூா் விலக்கு அருகே மருந்துப் பொருள்கள் ஏற்றிக்கொண்டு தென்காசி நோக்கிச் சென்ற டெம்போ அந்த பைக் மீது மோதியதாம். இதில், முருகனும், குமாரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

Advertisement

Advertisement

காயமடைந்த கருப்பசாமியை மீட்டு திருநெல்வேலியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் நள்ளிரவில் உயிரிழந்தாா். ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments