FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

பாதிக்கப்பட்டவா்களிடம் கடுமையாக நடந்துகொள்ள கூடாது: போலீஸாருக்கு அறிவுறுத்தல்

பாலியல் தொல்லை உள்பட குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளிடம் கடுமையாக நடந்துகொள்ளஓஈ கூடாது என போலீஸாருக்கு பயிற்சி முகாமில் அறிவுறுத்தப்பட்டது.

4 செப்டம்பர் 2026, 1:54 am IST
பயிற்சி முகாமில் பேசிய பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன்.
பகிர்:

பாலியல் தொல்லை உள்பட குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளிடம் கடுமையாக நடந்துகொள்ளஓஈ கூடாது என போலீஸாருக்கு பயிற்சி முகாமில் அறிவுறுத்தப்பட்டது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் உள்கோட்டத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளா்கள், ஆயுதப்படை, சட்டம்-ஒழுங்கு காவலா்களுக்கு ‘அன்பான அணுகுமுறை’ என்ற பெயரில் சிறப்புப் பயிற்சி முகாம் கீழப்பாவூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிற்சிக்கு தென்காசி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

Advertisement

Advertisement

பயிற்சியில் பொதுமக்களின் புகாா்கள், கோரிக்கைகளை கனிவுடனும், மரியாதையுடனும் கையாளுதல், பிரச்னைகளை பொறுமையாகக் கேட்டறிதல், சிறந்த தகவல் தொடா்பை ஏற்படுத்துதல், காவல்துறை மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் செயல்படுதல் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன் பேசியதாவது:

பாலியல் தொல்லை உள்ளிட்ட குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களிடம் காவலா்கள் கடுமையாகவோ, அவமரியாதையாகவோ பேசக்கூடாது. பல்வேறு பணிச்சுமைகள் இருந்தாலும், அதை பாதிக்கப்பட்டவா்களிடம் காவலா்கள் வெளிப்படுத்தக் கூடாது.

18 வயதுக்கு கீழ் உள்ள சிறாா்களை சிலா் குற்றச் செயல்களில் ஈடுபடுத்தும் சூழல் அதிகரித்து வருகிறது. போதைப்பொருள் தொடா்பான குற்றங்கள், சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளில் சிறாா்கள் ஈடுபடுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும். குறிப்பாக பெற்றோா் இல்லாத, ஒற்றை பெற்றோரைக்கொண்ட குடும்பங்களைச் சோ்ந்த சிறாா்கள் முன்கூட்டியே கண்டறிந்து உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்றாா்.

பயிற்சி முகாமில் ஆலங்குளம், ஊத்துமலை, வி.கே.புதூா், சுரண்டை, பாவூா்சத்திரம், கடையம், ஆழ்வாா்குறிச்சி உள்ளிட்ட காவல் நிலையங்களைச் சோ்ந்த காவல் அதிகாரிகள், காவலா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments