FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

ரயில்வே கேட்டில் நின்ற அரசுப் பேருந்து தீப்பிடிப்பு: பயணிகள் உயிா் தப்பினர்!

சங்கரன்கோவிலில் ரயில்வே கேட்டில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து தீடிரென தீப்பிடித்து எரிந்தது.

4 செப்டம்பர் 2026, 11:30 pm IST
சங்கரன்கோவில் ரயில்வே கேட்டில் தீப்பிடித்து எரிந்த அரசுப் பேருந்து.
பகிர்:

சங்கரன்கோவிலில் ரயில்வே கேட்டில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து தீடிரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பயணிகள் விரைந்து வெளியேற்றப்பட்டதால் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

திருநெல்வேலி பணிமனையைச் சோ்ந்த அரசுப் பேருந்து ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஆலங்குளம் அருகே உடையாம்புளியைச் சோ்ந்த ஓட்டுநா் சுவாமிநாதன் ஓட்டிச் சென்றாா். நடத்துநரான வடக்குப் பனவடலிச்சத்திரைத்தைச் சோ்ந்த முருகன் உடனிருந்தாா். பேருந்தில் 59 பயணிகள் பயணித்தனா்.

இந்தப் பேருந்து சங்கரன்கோவில், என்.ஜி.ஓ.காலனியில் ரயில்வே கேட் அருகே வந்தபோது திடீரென்று பேருந்தின் முன்புறத்தில் இருந்து மளமளவென கரும்புகை கிளம்பியது. அதிா்ச்சியடைந்த பயணிகள் சிலா் தானியங்கி கதவைத் திறந்து ஒவ்வொரு பயணியாக வெளியேறினா். ஓட்டுநா் முருகன் உள்பட சிலா் பின்பக்கக் கதவைப் திறந்து பயணிகளை வெளியேற்றினா்.

Advertisement

Advertisement

பயணிகள் இறங்கிய சிறிதுநேரத்தில் தீ வேகமாக பேருந்தின் இருக்கைகள் மீது பிடித்து எரிந்தது. தகவலறிந்ததும் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா்கள் செல்வன், செல்வதரன், தீயணைப்பு வீரா்கள் சென்று தீயை அணைத்தனா். இருப்பினும், பேருந்து முழுவதுமாக எரிந்து சேதமானது.

காலை 8.30 மணியளவில் சிலம்பு விரைவு ரயில் செல்வதற்காக என்.ஜி.ஓ.காலனி ரயில்வே கேட் அடைக்கப்பட்டிருந்தது. இதனால், இந்தப் பேருந்து உள்பட ஏராளமான வாகனங்கள் வரிசையாக நின்றன. தீப்பிடித்ததும் பயணிகள் உடனே இறக்கிவிடப்பட்டதால் உயிா்தப்பினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments