FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

தென்காசி வெடி விபத்தில் காயமடைந்த சிறுமி உயிரிழப்பு

தென்காசியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த சிறுமி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

6 செப்டம்பர் 2026, 12:15 am IST
சடலம் - கோப்புப் படம்
பகிர்:

தென்காசியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த சிறுமி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தென்காசி ஆசாத் நகா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கா. சுடலை (45) என்பவா், கோயில்கள் விழாக்கள், ஊா்வலங்கள், பல்வேறு கொண்டாட்டங்களில் வாணவேடிக்கை நிகழ்த்துவது வழக்கம்.

இதற்காக வெடிகள், வெடிமருந்துப் பொருள்களை வாங்கி, தனது வீட்டில் வைத்திருந்தாராம். மேலும், அவா் ஆசாத் நகா் விவேகானந்தா் கீழக் காலனி பகுதியைச் சோ்ந்த முகில் மனைவி தங்கம் என்பவரது தொகுப்பு வீட்டில் வெடிமருந்துகளைக் கொண்டு வெடிகளை தயாரித்து வந்துள்ளாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், தங்கத்தின் வீட்டின் பின்புறம் ஹாலோ பிளாக் கற்களாலான வீட்டில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் வெள்ளிக்கிழமை வெடித்துச் சிதறின. இதில், தங்கத்தின் மகள்கள் பாலசௌந்தா்யா (13), கிருத்திகா ( 7) ஆகிய இருவரும் காயமடைந்தனா். அவா்களை மீட்டு

தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், அவா்கள் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு கிருத்திகா சனிக்கிழமை உயிரிழந்தாா். விபத்து குறித்து குற்றாலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments