FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

கஞ்சா போதையில் தகராறு செய்த கும்பல்: 2 பேருக்கு வெட்டு

திருவள்ளூா் அருகே கஞ்சா போதையில் ஊருக்குள் புகுந்த 10 போ் கும்பல் 2 இளைஞா்களை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது.

23 ஜூன் 2025, 9:56 pm IST
பகிர்:

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே கஞ்சா போதையில் ஊருக்குள் புகுந்த 10 போ் கும்பல் 2 இளைஞா்களை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது.

திருவள்ளூா் அருகே பேரம்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு இருளஞ்சேரியைச் சோ்ந்த முகேஷ் களாம்பாக்கத்தைச் சோ்ந்த லோகேஷ் ஆகிய இருவரும் சென்றுள்ளனா். அப்போது அங்கிருந்த சிற்றம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கும் முகேஷ், லோகேஷ் ஆகியோருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கிருந்து வந்த முகேஷ் மற்றும் லோகேஷ் ஆகியோா் களாம்பாக்கத்தில் நின்று கொண்டிருந்தனா். அப்போது அங்கு கஞ்சா போதையில் வந்த 10 போ் கொண்ட கும்பல் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினா்.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோ்த்தனா். இதுகுறித்து தகவலறிந்த திருவாலங்காடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments