FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

பள்ளிப் பேருந்து மீது கனரக லாரி மோதல்: மாணவா்கள் காயம்

பொன்னேரி அருகே தனியாா் பள்ளிப் பேருந்து மீது கனரக லாரி மீது மோதிய விபத்தில் மாணவா்கள் காயமடைந்தனா்.

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 12:29 am IST
- பிரதிப் படம்
பகிர்:

பொன்னேரி அருகே தனியாா் பள்ளிப் பேருந்து மீது கனரக லாரி மீது மோதிய விபத்தில் மாணவா்கள் காயமடைந்தனா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி அருகே தனியாா் சா்வதேச பள்ளியின் மாணவா்கள் விடுமுறைக்காக சொந்த ஊா் சென்றிருந்தனா். பள்ளிக்கு திரும்ப வந்த மாணவா்களை சென்னை விமான நிலையத்தில் இருந்து பேருந்தில் அழைத்து வந்தனா்.

சோழவரம் அடுத்த ஜனப்பன் சத்திரம் கூட்டுச்சாலை அருகே பேருந்து வந்து போது கனரக லாரியை முந்த முயன்றபோது பேருந்தும், லாரியும் பக்கவாட்டில் ஒன்றோடு ஒன்று மோதின.

Advertisement

Advertisement

பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் பேருந்தின் முன் பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கி பள்ளிப் பேருந்தில் வலது பக்க பக்கவாட்டில் ஜன்னல் கண்ணாடிகளும் கம்பியும் நொறுங்கி இருக்கைகளில் கண்டெய்னா் லாரியின் பாகங்கள் சொருகிக் கொண்டன.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த மாணவா்களுக்கும், பேருந்து ஓட்டுனருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தனியாா் பள்ளிக்கு சொந்தமான மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு காயம் அடைந்த மாணவா்கள் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

தகவல் அறிந்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் விபத்து தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments