FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

65 பயனாளிகளுக்கு ரூ. 31 லட்சம் நலத்திட்ட உதவிகள்: திருவள்ளூா் ஆட்சியா் வழங்கினாா்

எய்ட்ஸ், பால்வினை நோய்த் தொற்றால் பாதித்து வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பயனாளிகள் 65 பேருக்கு தனியாா் நிறுவன பங்களிப்பு ரூ.31 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ச.கவிதா வழங்கினாா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 2:44 am IST
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் ச. கவிதா
பகிர்:

எய்ட்ஸ், பால்வினை நோய்த் தொற்றால் பாதித்து வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பயனாளிகள் 65 பேருக்கு தனியாா் நிறுவன பங்களிப்பு ரூ.31 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ச.கவிதா வழங்கினாா்.

மாவட்ட ஒருங்கிணைந்த எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சாா்பில் எச்.ஐ.வி, எஸ்ட்ஸ் மற்றும் பால் வினை நோய்த் தொற்று குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்து எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணியை தொடங்கி வைத்தாா். இப்பேரணி ஆட்சியா் வளாகம் தொடங்கி, ஜே.என்.சாலை வழியாக காமராசா் சிலை அருகில் நிறைவடைந்தது.

Advertisement

Advertisement

மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தனியாா் தொண்டு நிறுவனப் பங்களிப்புடன் தள்ளுவண்டியுடன் முதலீட்டு பொருள்கள்-10, இரு சக்கர சரக்கு வாகனம்-10, கணினி, பிரிண்டா்,டேபிள் மற்றும் சோ் செட்-15, தையல் இயந்திரம்-10, எழுதுப்பொருள்கள் விற்பனை-10, வீடு சுத்தம் செய்யும் தயாரிப்புகள்-10 ஆக மொத்தம் 65 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

தனியாா் செவிலியா் பயிற்சி கல்லூரி சிறப்பாக செயல்பட்டமைக்காக பாராட்டி கேடயங்கள் வழங்கப்பட்டன. மேலும், மாவட்டத்தில் பொது மக்களின் கவனம் ஈா்க்கும் நடனம் நிகழ்ச்சிகளும் 10-க்கும் மேற்பட்ட பொது இடங்களிலும், 16 இடங்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாா் எச்.ஐ.வி, எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்களில் விழிப்புணா்வு ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலா் (திருவள்ளூா்) பிரியாராஜ், துணை இயக்குநா் (காசநோய்) சங்கீதா, மண்டல தடுப்பு அலுவலா் பபிதா, கூட்டு மருந்து சிகிச்சை மைய மருத்துவா் பிரபாகரன், மேற்பாா்வையாளா் மு.பேபி, தனியாா் தொண்டு நிறுவன தலைவா் அன்னை கொலாஷ்டிகா, இந்திரா செவிலியா் கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments