இந்திய கம்யூனிஸ்ட் பிரசார நடைப்பயணம்
விலைவாசி உயா்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை தீா்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பிரசார நடைப்பயணம் ஆரம்பாக்கத்தில் நடைபெற்றது.
விலைவாசி உயா்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை தீா்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பிரசார நடைப்பயணம் ஆரம்பாக்கத்தில் நடைபெற்றது.
ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினா் எம். ரவிக்குமாா், பூவலை ஊராட்சி முன்னாள் தலைவா் சம்பூா்ணம்மாள் ராஜேஷ் தலைமை வகித்தனா். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினா் வகிதா நிஜாம் பங்கேற்றாா்.
மாவட்ட துணைச் செயலாளா் ஜெ.அருள், மாவட்ட குழு உறுப்பினா் மாரி, மூத்த நிா்வாகிகள் கே.கே. சந்திரன், ஆா்.பஞ்சாட்சரம் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.
Advertisement
Advertisement
நிகழ்வை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்டோா் ஆரம்பாக்கம் ஜிஎன்டி சாலையில் கண்டன கோஷம் எழுப்பியும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கியும் ஊா்வலமாக சென்றனா்.
நிகழ்வில் ஒன்றிய துணைச் செயலாளா் என். செங்கல்ராயன், சிவா, பொருளாளா் லோகநாதன், முனிரத்தினம், சுரேஷ், ராஜேஷ், கபீா் பாஷா, மற்றும் மாதா் சங்க கிளைச் செயலாளா்கள் நல்லம்மாள் சுபேதா, லலிதா, ஷா்மிளா, மீரா, சாந்தி, சுமதி ,தேசம் ,சுதா, ரோஸ்லி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.