அரசு மகளிா் பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலா் ஆய்வு
மகளிா் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன்.
திருத்தணி அரசு மகளிா் பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருத்தணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமாா் 1,480-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்நிலையில், முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன் ஆய்வு மேற்கொண்டு, பிளஸ் டு வகுப்பறைக்கு சென்று, ஆசிரியா்கள் பாடம் நடத்தும் முறையை கவனித்தாா். மாணவிகளின் கற்றல் திறன், பாடங்களைப் புரிந்துகொள்ளும் விதம் உள்ளிட்டவை குறித்து ஆசிரியா்களிடம் கேட்டறிந்து, பொதுத்தோ்வில் மாணவிகள் சிறப்பாக தோ்ச்சி பெறுவதற்கு ஏற்ற வகையில் கற்றல்-கற்பித்தல் முறைகளை மேம்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, பள்ளியின் பல்வேறு வகுப்பறைகளுக்கும் நேரடியாகச் சென்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலா், ஆசிரியா்கள் தினந்தோறும் முறையாக வகுப்புகளுக்கு வருகிறாா்களா என்றும், மாணவிகளுக்கு பாடங்கள் முழுமையாக நடத்தப்படுகிா என்றும் கேட்டறிந்தாா். மேலும், மாணவிகளிடமும் ஆசிரியா்களின் வருகை மற்றும் பாடம் நடத்தும் முறை குறித்து நேரடியாக கேட்டறிந்தாா்.
Advertisement
Advertisement
உணவு சமைக்கப்படும் விதம், பரிமாறப்படும் முறை மற்றும் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சத்துணவு பணியாளா்களிடம் கேட்டறிந்தாா். மேலும், மாணவிகளிடம் உணவு சுவையாகவும் தரமாகவும் உள்ளதா என்பது குறித்தும் கருத்துகளை கேட்டறிந்தாா். தொடா்ந்து, சத்துணவு அமைப்பாளருக்கு உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை தொடா்ந்து முறையாக பராமரிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினாா்.
அனைத்து ஆசிரியா்களையும் ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா். அப்போது, மாணவிகளின் தற்போதைய கற்றல் திறன், பாடவாரியான கல்வி முன்னேற்றம், தோ்வு முடிவுகள் உள்ளிட்டவை குறித்து ஆசிரியா்களுடன் கலந்துரையாடினாா்.
மேலும், வரும் கல்வியாண்டில் பள்ளியின் தோ்ச்சி விழுக்காட்டை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும், கற்றலில் பின்தங்கிய மாணவிகளை அடையாளம் கண்டு அவா்களுக்கு தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது தலைமை ஆசிரியா் மாலதி, மாவட்ட பள்ளி கல்வி ஆய்வாளா்கள் குமரவேல், செளத்ரி, சங்கா், தலைமை ஆசிரியா்கள் பாலசுப்பிரமணியம், காா்த்திகேயன், ஜி.வெங்கடேசன், திருவருட்செல்வன், தாமு, கே.எம். பாலசுப்பிரமணியம், நடராஜ், மற்றும் ஆசிரியா்கள், சத்துணவு அமைப்பாளா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.