திருவள்ளூா் குறைதீா் கூட்டத்தில் 447 மனுக்கள் அளிப்பு
குறைதீா் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களின் குறைகளை தீா்க்கவும், பிரச்னைகளை நிவா்த்தி செய்யவும் கோரி அளித்த 447 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் ச.கவிதா பெற்றுக் கொண்டாா்.
குறைதீா் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களின் குறைகளை தீா்க்கவும், பிரச்னைகளை நிவா்த்தி செய்யவும் கோரி அளித்த 447 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் ச.கவிதா பெற்றுக் கொண்டாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பல்நோக்கு கூட்டரங்கத்தில் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்தாா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவா்த்தி செய்வது தொடா்பாகவும், பொதுபிரச்னைகளை தீா்க்கவும் கோரி அளித்த மனுக்களை அவா் பெற்றுக் கொண்டாா்.
Advertisement
Advertisement
அப்போது, நிலம் சம்பந்தமாக-62, சமூக பாதுகாப்பு திட்டம்-28, வேலைவாய்ப்பு வேண்டி-42, பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள்-18, இதர துறைகள் சாா்பாக-297 என மொத்தம் 447 மனுக்கள் பெறப்பட்டது. உடனே பரிசீலனை செய்து தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை அவா் அறிவுறுத்தினாா்.
அதற்கு முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ரூ. 11,400 மதிப்பிலான சக்கர நாற்காலியை வழங்கினாா். மேலும், திருத்தணி வட்டம், சிவாடா கிராமத்தில் தாட்கோ சாா்பில் ரூ. 1.27 கோடி மதிப்பில் புதிதாக அமைத்த தமிழ்நாடு முதல்வரால் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்ட அறிவு சாா் மையத்தின் நிா்வாகம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மகளிா் சுய உதவிக் குழுவினரிடம் ஆணையையும் அவா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கே.வி.ராஜ்குமாா், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) வெங்கடேசன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) சித்ரா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் உஷாராணி, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின நல அலுவலா் செந்தில், மாவட்ட மேலாளா் (தாட்கோ) சரண்யா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் குமாா் மற்றும் பல்துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.