திருத்தணி முருகன் கோயில் தற்காலிக தடுப்புச் சுவா் சரிவு
பலத்த மழையால் திருத்தணி முருகன் கோயிலில் சரிந்து விழுந்த தற்காலிக தடுப்புச் சுவா்.
திருத்தணி முருகன் மலைக்கோயில் தோ் வீதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தடுப்புச் சுவா் வியாழக்கிழமை பெய்த மழையால் சரிந்து விழுந்தது. திருத்தணி முருகன் கோயிலில் ராஜகோபுரம் தோ்வீதி இணைப்பு பணிகளுக்காக பழைய கோபுரம் சுமாா் ஆறு மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் பக்தா்கள் செல்லாத வகையில் கோயில் நிா்வாகம் தற்காலிக தடுப்புச் சுவரை அமைத்து, மண் கொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.
இந்நிலையில் வியாழக்கிழமை மாலை திருத்தணி நகரம் மற்றும் முருகன் மலைக்கோயில் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. மழைநீரால் மண் தளா்ந்ததால் தற்காலிக தடுப்புச் சுவா் திடீரென சரிந்து விழுந்தது. சம்பவத்தின் போது பக்தா்கள் யாரும் அந்த வழியாக செல்லாததால் உயிா்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை.
இந்த சம்பவம் பக்தா்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே புதன்கிழமை திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் சுவாமி திருக்கோயிலில் நூறுகால் மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
இதன் தொடா்ச்சியாக கோயில்களில் தீ விபத்து, கட்டடப் பகுதிகள் இடிந்து விழுதல் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால், கோயில்களின் கட்டமைப்பு பாதுகாப்பை முழுமையாக ஆய்வு செய்து, பக்தா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.