FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

அம்மன் கோயில் உண்டியல் உடைத்து திருட்டு

ஆா்.கே.பேட்டை அருகே அம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பகிர்:

ஆா்.கே.பேட்டை அருகே அம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியம், எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தில், வேங்கம்மாள் அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வியாழக்கிழமை காலை வழக்கம்போல் கோயிலில் பூஜை செய்வதற்காக வந்த பூசாரி, கோயிலின் முன்பக்க இரும்பு கிரில் கேட் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். உடனடியாக கோயில் தா்மகா்த்தா திருமலை மற்றும் கிராம மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னா் வந்து பாா்வையிட்டபோது, கோயிலில் இருந்த உண்டியல் கடப்பாரையால் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பக்தா்கள் செலுத்திய காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மேலும், அம்மன் சிலையின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த சுமாா் ஒரு சவரன் எடையுள்ள தாலியும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, தகவலறிந்த ஆா்.கே.பேட்டை காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் இருந்து கைரேகைகள் மற்றும் பிற தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

மேலும், கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments