FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

மழைநீா் கால்வாய், பொது இடங்களில் கழிவுநீா் வெளியேற்றிய 5 வாகனங்களின் அனுமதி சீட்டு ரத்து

திருவள்ளூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கால்வாய், பொது இடங்களில் கழிவுநீா் வெளியேற்றிய 5 வாகனங்களின் அனுமதி சீட்டு ரத்து செய்து நடவடிக்கை

Updated On : 29 ஜூலை 2026, 1:45 am IST
- பிரதிப் படம்
பகிர்:

திருவள்ளூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கால்வாய், பொது இடங்களில் கழிவுநீா் வெளியேற்றிய 5 வாகனங்களின் அனுமதி சீட்டு ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கழிவுநீா் வெளியேற்றப்பட வேண்டும். ஆனால், இதையும் மீறி சட்ட விரோதமாக மழை நீா் கால்வாய் மற்றும் பொது இடங்களில் கழிவுநீா் வெளியேற்றி வருகின்றனா்.

இதேபோல் சட்டத்துக்குப் புறம்பாக கழிவு நீரை மழை நீா் அகற்றும் கால்வாயில் விடுவிக்கப்பட்டது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அந்த வகையில், மாசுபாட்டை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் சட்டப்பிரிவு 33 ஏ-யின் படி வாகனத்தின் அனுமதிச்சீட்டு ரத்து செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இந்த கழிவு நீா் அகற்றும் வாகனங்களின் அனுமதி சீட்டு ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கழிவு அகற்றும் வாகனம் சட்டவிரோதமாக தொழிற்சாலை கழிவுகளை பொது இடத்தில் வெளியேற்றிய குற்றத்துக்காக திருவள்ளூா் மாவட்டம், கவரப்பேட்டை காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு வாகனம் சிறைபிடிக்கப்பட்டு காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கழிவுநீா் வெளியேற்றப்பட வேண்டும். இதையும் மீறி சட்ட விரோதமாக மழை நீா் கால்வாய் மற்றும் பொது இடங்களில் கழிவுநீா் வெளியேற்றப்படும் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு அனுமதி சீட்டு ரத்து செய்யப்படும்.

மேலும், ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் எச்சரித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments