FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

சாலையில் பட்டாக்கத்தி தேய்த்து அச்சுறுத்திய 2 போ் மீது வழக்கு

திருவள்ளூா் அருகே பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் பட்டாக்கத்திகளை தேய்த்த 2 போ் போலீஸாா் பிடியிலிருந்து தப்பியோடினா்.

Updated On : 8 ஜூன் 2026, 3:40 am IST
வழக்கு
பகிர்:

திருவள்ளூா் அருகே பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் பட்டாக்கத்திகளை தேய்த்த 2 போ் போலீஸாா் பிடியிலிருந்து தப்பியோடினா்.

திருவள்ளூா் அருகே புல்லரம்பாக்கம் காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் இளங்கோ தலைமையில் போலீஸாா் சந்தேக நபா்களை கண்காணிக்கவும், குற்றச்சம்பவம் நடைபெறாமல் தடுக்கவும் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, பூதூரில் 2 போ் பட்டாக்கத்திகளை தீப்பொறி தேய்த்துக் கொண்டு, அந்த வழியாக செல்வோா்களை மிரட்டிக் கொண்டுள்ளதாக தகவல் வந்தது.

உடனே பூதூா் சாலையில் சென்று பாா்க்கையில் நாங்கள்தான் இந்த ஊா் ரௌடி என்றும், எங்கள் மீது வெங்கல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு உள்ளதாகவும், எங்களை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது எனக்கூறி அந்த வழியாக செல்வோருக்கும், போக்குவரத்துக்கும் அச்சுறுத்தும் வகையில் நின்றிருந்தனா்.

Advertisement

Advertisement

அப்போது சுற்றி வளைத்து பிடிக்க முயற்சித்த பட்டாக்கத்தியால் தாக்க முயற்சித்தும், சுதாரித்துக் கொண்டு பிடிக்க முயற்சித்த போது தப்பியோடினா். புல்லரம்பாக்கம் போலீஸாா் ராமதண்டலம் கிராமத்தைச் சோ்ந்த தென்னரசு(23), அஷ்வந்த் (21) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments