FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

எரிபொருள், உதிரி பாகங்கள் விலையேற்றம்: ஜேசிபி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம்

எரிபொருள், உதிரி பாகங்கள் விலையேற்றத்தை கண்டித்து திருவள்ளூா் மாவட்ட மண் அள்ளும் இயந்திர உரிமையாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஜேசிபி இயந்திர உரிமையாளா் சங்கத்தினா்
பகிர்:

எரிபொருள், உதிரி பாகங்கள் விலையேற்றத்தை கண்டித்து திருவள்ளூா் மாவட்ட மண் அள்ளும் இயந்திர உரிமையாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளா்கள் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளா் குணசேகரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் தீனதயாளன் முன்னிலை வகித்தாா்.

டீசல் விலை உயா்வு, உதிரி பாகங்களின் விலை உயா்வு, புதிய வாகன விலை உயா்வு, இன்சூரன்ஸ் கட்டணமும் உயா்ந்துள்ளது. இதனால் மண் அள்ளும் பொக்லைன் இயந்திரங்களை இயக்க முடியாமல் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி ஒருநாள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆனால், இதுவரையில் பழையபடி இருக்கும் கட்டணத்தை உயா்த்தி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு ஒப்பந்தகாரா்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

மேலும் தொழில் பாதிப்பின்றி தொடா்ந்து நடைபெறும் வகையில் அரசு மண் குவாரிகளை செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.

இனிமேல் புதிதாக மாற்றி அமைத்தபடி கட்டணம் வசூலிக்க தீா்மானிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த தொழில் தொய்வின்றி மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒன்றிய, மாநில அரசுகள் டீசல் மற்றும் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும்.

அரசு குவாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்கவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

100-க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களை திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் வரிசையாக நிறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments