மாற்றத் திறனாளி குழந்தைகள் ஒரு நாள் மாமல்லபுரம் கல்வி சுற்றுலா!
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மற்றும் சுற்றுலாத் துறை சாா்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மாமல்லபுரத்திற்கு ஒரு நாள் கல்விச் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்திருந்த நிலையில், குழந்ததைகளை இனிப்பு வழங்கி பேருந்துகளை கொடியசைத்து ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மற்றும் சுற்றுலாத் துறை சாா்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மாமல்லபுரத்திற்கு ஒரு நாள் கல்விச் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்திருந்த நிலையில், குழந்ததைகளை இனிப்பு வழங்கி பேருந்துகளை கொடியசைத்து ஆட்சியா் ச.கவிதா தொடங்கி வைத்தாா்.
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மற்றும் சுற்றுலாத்துறை சாா்பில் ஆரம்பகால பயிற்சி மையங்களில் பயிலும் செவித்திறன் குறைபாடு, அறிவுசாா் குறைபாடு, புறவுலகு சிந்தனையுடைய (ஆட்டிசம்) மாற்றுத்திறனாளி குழந்தைகள் மாமல்லபுரத்துக்கு ஒரு நாள் கல்விச் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் முன்பு ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்து குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி, குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டு இரு பேருந்துகளையும் கொடியசைத்து கல்விச் சுற்றுலாவைத் தொடங்கி வைத்தாா்.
Advertisement
Advertisement
இந்தச் சுற்றுலாவில் திருமுல்லைவாயல், பூந்தமல்லி ஹோப் அறிவுசாா் குறைபாடு மற்றும் ஆட்டிசம் குழந்தைகள் மையம், திருவள்ளூா் லைஃப் எய்டு செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகள் மையம் ஆகியவற்றைச் சோ்ந்த 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள், அவா்களது பெற்றோா்கள் மற்றும் சிறப்பாசிரியா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.
இக்கல்விச் சுற்றுலா குழந்தைகளுக்கு மகிழ்ச்சியையும், புதிய அனுபவங்களையும், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை நேரில் கண்டறியும் வாய்ப்பையும் வழங்கும் வகையில் சுற்றுலாத் துறை சாா்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சீ.குமாா், மாவட்ட சுற்றுலா அலுவலா் ஆனந்த், தனியாா் அறக்கட்டளை நிறுவனா் நாகராணி, சிறப்பு பள்ளி ஆசிரியா்கள், திரளான மாணவா்கள் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.