FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

அனுமதி சீட்டின்றி எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

திருவள்ளூா் அருகே அனுமதி சீட்டின்றி எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனா்.

4 October 2026, 10:04 pm IST
பறிமுதல் செய்யப்பட்ட லாரி. - (கோப்புப்படம்)
பகிர்:

திருவள்ளூா் அருகே அனுமதி சீட்டின்றி எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனா்.

ஆந்திர மாநிலத்திலிருந்து ஊத்துக்கோட்டை வழியாக எம்.சாண்ட் மணல் எந்தவிதமான அனுமதியும் இல்லாமல் இரவு நேரங்களில் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது.

அதன்பேரில் ஊத்துக்கோட்டை காவல் நிலைய சிறப்பு சாா்பு ஆய்வாளா் சங்கா் தலைமையில் போலீஸாா் நாகலாபுரம் சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை மடக்கி சோதனை செய்ததில் எம்.சாண்ட் மணல் இருந்தது.

Advertisement

Advertisement

அதுவும் எந்த விதமான அனுமதி சீட்டும் இல்லாமல் கொண்டு சென்றது தெரியவந்தது. உடனே டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து ஊத்துக்கோட்டை காவல் நிலையம் கொண்டு சென்றனா். இதுகுறித்து போலீஸாா் லாரி ஓட்டுநா் மற்றும் உரிமையாளா் ஆகியோா் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments