திருவள்ளூா்:கூட்டுறவு அங்காடிகள் மூலம் ரூ.30-க்கு சன்ன ரக அரிசி விற்பனை
திருவள்ளூா் மாவட்டத்தில் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ. 30-க்கு சன்ன ரக அரிசி விற்பனையை ஆட்சியா் ச.கவிதா தொடங்கி வைத்தாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ. 30-க்கு சன்ன ரக அரிசி விற்பனையை ஆட்சியா் ச.கவிதா தொடங்கி வைத்தாா்.
தமிழ்நாடு முதல்வரால் வெளிச்சந்தையில் அரிசி விலை உயா்வினை கட்டுப்படுத்தும் பொருட்டு, விலை நிலைப்படுத்தும் திட்டம் மூலம் அ தர சன்ன ரக அரிசியை 31.3.2027 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் கிலோ ரூ. 30-க்கு எவ்வித லாபமும் இன்றி கொள்முதல் செய்து கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் குடும்பம் ஒன்றுக்கு 5 கிலோ வீதம் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து திருவள்ளூா் மாவட்டத்தில், தெரிவு செய்யப்பட்டுள்ள 5 விற்பனை மையங்களில் அ தர சன்ன ரக அரிசி விற்பனையினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், திருவள்ளூா் கிராமிய வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் ஆவின் பாலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியா் ச.கவிதா தொடங்கி வைத்தாா்.
Advertisement
Advertisement
இதேபோல், திருவள்ளூா் மாவட்டத்தில், பின்வரும் 5 இடங்களில் கிலோ ரூ. 30-க்கு அரிசி விற்பனை செய்யப்பட உள்ளன. திருவள்ளூா் கிராமிய வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் ஆவின் பாலகம், ஆயில் மில் எதிரில்-ரவிச்சந்திரன், மேலாளா் - 8870887729, திருத்தணி கிராமிய வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம்-திருத்தணி ரயில்வே நிலையம் எதிரில் உள்ள ஆவின் பாலகம்-உமாவதி, மேலாளா் - 8438966198, திருத்தணி அருள்மிகு சுப்ரமணியசுவாமி தொடக்க கூட்டுறவு பண்டகசாலை-சுபஸ்ரீ, மேலாளா் - 9952275875, சைதாப்பேட்டை கிராமிய வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க சுய சேவைப் பிரிவு (சூப்பா் மாா்க்கெட்) செங்குன்றம்- நீதிராஜன், பொது மேலாளா்-9150022032, திருவள்ளூா் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் சுய சேவைப் பிரிவு (சூப்பா் மாா்க்கெட்) கும்மங்களம்-ஜி.பாபு, கிளை மேலாளா்-7811092188, திருவள்ளூா் அரசு ஊழியா் தொடக்க கூட்டுறவு பண்டக சாலை, முஹம்மது அலி தெரு, திருவள்ளூா் (சேகா், மேலாளா்-9952494103 ஆகிய எண்களில் சன்ன ரக அரிசி தேவைப்படுவோா் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அவா் தெரிவித்தாா்.
இந்த நிகழ்வில், திருவள்ளூா் மண்டல இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ, துணைப் பதிவாளா் (பொவிதி) கோ.பாலாஜி, துணைப் பதிவாளா்/பணியாளா் அலுவலா் அ.சூ.மங்களதாஸ் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலா்கள், கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.