FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தமிழகத்தில் சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!

தமிழகத்தில் சன்ன ரக அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, கிலோ ரூ.55-க்கு விற்பனை செய்யப்பட்ட அரிசி தற்போது ரூ.75 ஆக உயர்ந்துள்ளது குறித்து...

12 அக்டோபர் 2026, 8:41 am IST
தமிழகத்தில் சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு - டிஎன்எஸ்
பகிர்:

மதுரை: தமிழகத்தில் சன்ன ரக அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, கிலோ ரூ.55-க்கு விற்பனை செய்யப்பட்ட அரிசி தற்போது ரூ.75 ஆக உயர்ந்துள்ளது என தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தினேஷ் சிங் தெரிவித்தார்.

தமிழகத்தில் சன்ன ரக (பொன்னி,சீரக சம்பா...) போன்ற அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, கிலோ ரூ.55-க்கு விற்பனை செய்யப்பட்ட அரிசி தற்போது ரூ.75 ஆக உயர்ந்துள்ளது. வரும் ஜனவரி மாதம் வரை சன்ன ரக நெல் தட்டுப்பாடு நீடிக்கும் என்று தினேஷ் சிங் தெரிவித்தார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

Advertisement

Advertisement

உற்பத்தி, வரத்து குறைவு

கடந்த ஆறு மாதங்களாக நெல் அறுவடை குறைந்து வருகிறது. குறிப்பாக, குருவை அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதால் சன்ன ரக நெல்லுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தேவையான அளவு சன்ன ரக அரிசி உற்பத்தி செய்ய முடியவில்லை. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து முன்பு 100 சதவீதம் கிடைத்து வந்த சன்ன ரக அரிசி வரத்து தற்போது 20 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பெருவெட்டு அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை

இதன் காரணமாக, கிலோ ரூ.55-க்கு விற்பனை செய்யப்பட்ட சன்ன ரக அரிசி தற்போது ரூ.75 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், பெருவெட்டு அரிசிக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லை. அது கிலோ ரூ.50-க்கு கிடைக்கிறது.

தமிழகத்தில் பருவமழை குறைவாக இருப்பதால் சன்ன ரக நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் சன்ன ரக நெல் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் சன்ன ரக அரிசி உற்பத்திக்கு மானியமும் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தினேஷ் சிங்

சன்ன ரக நெல் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்

எனவே, தமிழகத்திலும் டெல்டா மாவட்டங்களில் சன்ன ரக நெல் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். அறுவடை காலத்தில் நெல்லை உலர்த்துவதற்குத் தேவையான உலர்த்தும் இயந்திரங்களை (டிரையர்) வாங்கி விவசாயிகளுக்கு உதவ வேண்டும். விவசாயிகளிடம் சேவைக் கட்டணம் வசூலித்தால், அதற்கேற்ற சேவையை வழங்க வேண்டும். அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சூப்பர் எல் நினோ பாதிப்பு

தற்போது நிலவும் சூப்பர் எல் நினோ உள்ளிட்ட காலநிலை பாதிப்புகளும் நெல் உற்பத்தியைப் பாதித்துள்ளன. வரும் ஜனவரி மாதம் வரை சன்ன ரக நெல்லுக்குத் தட்டுப்பாடு நீடிக்க வாய்ப்புள்ளது. அதன் பிறகு நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன்ன ரக அரிசிக்கு மட்டுமே தட்டுப்பாடு

அரிசி விலை உயர்ந்துவிட்டதாகக் கருதி பொதுமக்கள் அச்சத்தில் அளவுக்கு அதிகமாக அரிசி வாங்கி இருப்பு வைக்க வேண்டாம். போதுமான அளவு மற்ற வகை அரிசிகள் இருப்பில் உள்ளன. சன்ன ரக அரிசிக்கு மட்டுமே தட்டுப்பாடு நிலவுகிறது என தெரிவித்தார்.

Price of fine-variety rice rises to ₹75 per kg in Tamil Nadu!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments