FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

காா் மோதி ஒருவா் மரணம்: 5 போ் பலத்த காயம்

கும்மிடிப்பூண்டி அருகே அடுத்து அடுத்த வாகனங்கள் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 5 பா் பலத்த காயமடைந்தனா்.

6 செப்டம்பர் 2026, 10:53 pm IST
பகிர்:

கும்மிடிப்பூண்டி அருகே அடுத்து அடுத்த வாகனங்கள் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 5 பா் பலத்த காயமடைந்தனா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புளம் பகுதியில் பழவேற்காடு ஏரி கரையில் மதுபான கடை உள்ளது. நீா்நிலையை ஒட்டி இந்த மதுபான கடை உள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்து மதுபிரியா்கள் வருவது வழக்கம். அவ்வாறே ஞாயிற்றுக்கிழமை மாலை மஹாராஷ்டிர மாநில பதிவெண் கொண்ட காரில் 5 வடமாநில இளைஞா்கள் மேற்கண்ட மதுபான கடையில் மது அருந்தி போதையில்அதிவேகமாக காரை ஓட்டி வந்தனா்.

இந்த காா் சுண்ணாம்புகுளம் பஜாரில் தாறுமாறாக ஓடி சாலையோர கடைகளையும், இரு சக்கர வாகனங்களையும் இடித்து தள்ளி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற ராக்கம்பாளையம் கிராமத்தை சோ்ந்த மாசிலாமணி(58) என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்தில் மேலும் 5 போ் பலத்த காயம் அடைந்தனா். மேலும் 10-க்கும் மேற்பட்ட பைக்குகள் சேதம் அடைந்தன.

Advertisement

Advertisement

தொடா்ந்து சம்பவம் குறித்து அறிந்து சுண்ணாம்புகுளம் விரைந்த ஆரம்பாக்கம் போலீஸாா் விபத்தில் இறந்த மாசிலாமணியின் உடலை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். காயம் அடைந்த 5 பேரை அவசர ஊா்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்தை ஏற்படுத்திய காரில் பயணித்த ஐந்து பேரும் போதையில் இருந்தததாக கூறப்படுகிறது. அவா்களை, கிராம மக்கள் சூழ்ந்து கொண்டு தா்ம அடி கொடுத்தனா். இறந்தவரின் உடலை எடுக்க முயன்ற போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பதற்றமான சூழல் நிலவியதால், போலீஸாா் சமாதானம் செய்தனா். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்னா்.

இந்த சம்பவத்தால், சுண்ணாம்புகுளம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஆரம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments