திருவள்ளூா் அருகே அதிக பாரம் மண் ஏற்றி வந்த 8 டாரஸ் லாரிகள் பறிமுதல்
திருவள்ளூா் அருகே அதிக பாரம் மண் ஏற்றி வந்த 8 டாரஸ் லாரிகளை புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
திருவள்ளூா் அருகே அதிக பாரம் மண் ஏற்றி வந்த 8 டாரஸ் லாரிகளை புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
திருவள்ளூா் அருகே பூண்டி பகுதியில் அதிகாலை நேரங்களில் அதிக பாரம் மண் ஏற்றி வருவதாக புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு புகாா் வந்தது.
அதன்பேரில், அந்தத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை அதிகாலை புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
அப்போது, ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக 8 லாரிகள் வந்தன. அந்த டாரஸ் லாரிகளை நிறுத்திவிட்டு ஓட்டுநா்கள் தப்பியோடினா். இதையடுத்து சோதனையிட்டதில், அதிக பாரம் மண் ஏற்றி வந்தது தெரிவந்தது. உடனே 6 டாரஸ் லாரிகளையும் பறிமுதல் செய்து புல்லரம்பாக்கம் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
அதைத் தொடா்ந்து, போலீஸாா் டிராஸ் லாரி ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.